என்னை யாராவது சைட் அடித்தால்.. நடிகை ரித்திகா சிங் அதிரடி பேச்சு!
ரித்திகா சிங்
சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
அப்படத்திற்கு பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, கிங் ஆஃப் கோதா, மழை பிடிக்காத மனிதன் என தொடர்ந்து படங்கள் நடித்தவர் ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார்.
அதிரடி பதில்!
இந்நிலையில், பேட்டி ஒன்றில் அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் ரஜினிகாந்தை செய்வேன். உயர்ந்த நட்சத்திரமாக இருந்தாலும், எவ்வளவு அன்பு, எவ்வளவு பணிவு, எவ்வளவு எளிமையைக் கொண்டிருக்கிறார் என்பதே பேராச்சரியமாக இருக்கும்.
உங்களை யாராவது சைட் அடித்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கிறீர்கள். நான் அதற்கு கொஞ்சம் பக்கத்தில் வந்து பாருங்களேன் என்பேன். தைரியம் இருந்தால் என் அருகில் வரட்டும்" என்று தெரிவித்துள்ளார்.