ரஜினிகாந்த் இப்படிப்பட்ட ஒரு நடிகர்தான்.. நடிகை ரித்திகா சிங் ஓபன் டாக்
ரித்திகா சிங்
மாதவன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங்.
முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில், தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார்.
மேலும் கடந்த ஆண்டு வேட்டையன் படத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்நினையில், ரஜினிகாந்த் குறித்து நடிகை ரித்திகா சிங் பேசியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரித்திகா சிங் ஓபன் டாக்
அவர் கூறியதாவது: "திரையுலகில் உள்ள சில நடிகர்களுடன் நடித்த தருணங்கள் எனது மனதில் எப்போதும் இருக்கும். அத்தகைய ஒரு நடிகர்தான் ரஜினிகாந்த். அவர் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும், மற்றவர்கள் மீது காட்டும் அன்பும் பாசமும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும்" என ரித்திகா கூறியுள்ளார்.