உங்களுக்கு திருமணம் எப்போது.. கேள்விக்கு பதிலளித்த நடிகை ரிது வர்மா
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரிது வர்மா.
தற்போது, தெலுங்கில் நாக சவுர்யா ஜோடியாக அவர் நடித்துள்ள 'வருடு காவலேனு' படம் இந்த வாரம் வெளியாகயுள்ளது.
இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார்.
ஒரு பேட்டியின்போது கல்யாணம் சம்பந்தப்பட்ட கதைகளாகவே நடிக்கிறீர்களே, உங்கள் திருமணம் எப்போது என ரிது வர்மாவிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் "அப்படிப்பட்ட கதைகள் ஏதேச்சையாகவே அமைந்து விடுகின்றன. ஆனால் நிஜத்தில் இன்னும் மூன்று நான்கு வருடங்களுக்கு திருமணம் பற்றிய பேச்சே இல்லை.
என்னை பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பதால் என் பெற்றோரும் திருமண விஷயத்தில் என்னை வற்புறுத்துவது இல்லை " என கூறியுள்ளார் ரிது வர்மா.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri