அவர் யாரென்றே எனக்கு தெரியாது.. பாலியல் புகாருக்கு ரியாஸ் கான் விளக்கம்
நடிகர் ரியாஸ் கான் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நெகடிவ் ரோல்களில் நடித்தவர். படங்கள், சீரியல்கள் என இரண்டிலும் பாப்புலர் நடிகராக இருக்கும் அவர் மீது நேற்று மலையாள நடிகை ரேவதி சம்பத் என்பவர் பாலியல் புகார் கூறி இருந்தார்.
தவறான எண்ணத்தில் ஆசைக்கு இணங்கும்படி தன்னுடன் போனில் பேசியதாகவும், தன்னுடன் தகாத உறவுக்கு ஓகே சொல்லும் தோழிகள் இருந்தால் அறிமுகம் செய்யும்படியும் அவர் கேட்டதாகவும் நடிகை கூறி இருந்தார்.
கேரளாவில் ஹேமா கமிட்டி ரிப்போர்ட் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பல நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விளக்கம்
இந்த சர்ச்சை பற்றி நடிகர் ரியாஸ் கான் தற்போது பேசி இருக்கிறார். 'ரேவதி சம்பத் யார் என்றே எனக்கு தெரியாது. அவரை தற்போது தான் செய்தியில் பார்க்கிறேன். '
'என் மீது கூறப்பட்டு இருக்கும் பொய் புகாருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன்' என ரியாஸ் கான் தெரிவித்து இருக்கிறார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
