இது உங்களுக்கு தேவையில்லை.. படத்தின் காலக்ஷன் அவுங்க பாத்துப்பாங்க: ஆர் ஜே பாலாஜி
ஆர் ஜே பாலாஜி
ஆர் ஜே, நடிகர், இயக்குனர் என பன்முகங்களை கொண்டவர் ஆர் ஜே பாலாஜி. இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இதன் பின் பல படங்களில் நடித்துவந்த இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி நடித்திருந்தார். தற்போது அவர் 'ரன் பேபி ரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 3 -ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் காலக்ஷன்
இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய பாலாஜி, " சமீபகாலமாக படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களை விட இளைஞர்கள் பாக்ஸ் ஆபிஸில் மும்முரம் காட்டுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஒரு உயிரே போய்விட்டது.
இது இளைஞர்களுக்கு தேவையில்லாத ஒன்று, இதனால் அவர்களுக்கு நேரம் தான் வீணாக போகிறது. படம் வெளியாகும் போது நல்லா இருக்கிறதா, இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள். பாக்ஸ் ஆபிஸ் காலக்ஷன் எல்லாம் படக்குழுவினர்கள் பார்த்துக்கொள்வார்கள்" என்று இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் எல்லாம் பொய்..உண்மையை போட்டு உடைத்த ஹெச் வினோத்