GOAT விஜய்க்கு ஜோடியானதும் கண்டுகொள்ளாத ஹீரோயின்.. மேடையில் விமர்சித்த RJ பாலாஜி

By Parthiban.A Jan 18, 2024 09:30 PM GMT
Report

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் "The Greatest of All Time (GOAT)" படத்தில் அவருக்கு ஜோடியாக மீனக்ஷி சவுத்ரி நடித்து இருக்கிறார். அவர் தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை படம் மூலமாக அறிமுகம் ஆனார்.

அதற்கு பிறகு RJ பாலாஜி ஜோடியாக மீனாட்சி சவுத்ரி சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து இருக்கிறார். அதனை தொடர்ந்து தான் அவருக்கு விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.

GOAT விஜய்க்கு ஜோடியானதும் கண்டுகொள்ளாத ஹீரோயின்.. மேடையில் விமர்சித்த RJ பாலாஜி | Rj Balaji About Goat Heroine Meenaakshi Chaudhary

மேடையில் விமர்சித்த RJ பாலாஜி

இன்று சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் RJ பாலாஜி, சத்யராஜ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு ஹீரோயின் மீனாக்ஷி சவுத்ரி வராதது பற்றி RJ பாலாஜி மேடையில் விமர்சித்து பேசி இருக்கிறார்.

"இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகும்போது கொலை என்ற ஒரே ஒரு படத்தில் மீனாட்சி சவுத்ரி நடித்து இருந்தார். அதுவும் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. முதல் நாள் ஷூட்டிங் வரும்போது பெரிய நடிகர்கள் பலர் இருக்கிறார்கள் என ஆச்சர்யமாக பார்த்தார்."

"ஆனா இப்போ என்னடானா அவங்க ஆடியோ லான்ச்சுக்கு வரல, ப்ரோமோஷனுக்கும் வரல. விஜய் சார் கூட ஹீரோயினா நடிச்சிட்டு இருக்காங்க."

"என் கண் முன்னாடி பார்த்த ஜாவா சுந்தரேசன் நீங்கதான் மீனாட்சி சவுத்ரி. வாழ்துக்கள்" என RJ பாலாஜி கூறி இருக்கிறார்.   


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US