ரஜினி வியந்து பாராட்டிய படம்!! தவறவிட்ட ஆர் ஜே பாலாஜி.. என்னவென்று பாருங்க
ஆர் ஜே பாலாஜி
ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி, தற்போது பிரபல நடிகர், இயக்குனராக வலம் வருகிறார்.
இவர் கடந்த 2019 ம் ஆண்டு வெளியான LKG என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக களமிறங்கினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி நடித்திருந்தார்.

இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள 'சொர்க்கவாசல்' திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.
இதன் ப்ரோமோஷன் பணிகளில் பாலாஜி ஈடுபட்டுள்ளார் அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய இவர் இன்று வரை மிகவும் வருத்தப்படும் விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.
என்னவென்று பாருங்க
அதில், "அயோத்தி படத்தில் நடிக்க முதலில் என்னை தான் இயக்குனர் அணுகினார். ஆனால், சில காரணத்தினால் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

அதனை நினைத்து இன்று வரை நான் வருத்தப்படுகிறேன்" என்று கூறியுள்ளார். அயோத்தி படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்த், படக்குழுவினரை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri