சூர்யாவின் கருப்பு படத்திற்கு ஆர்.ஜே. பாலாஜி கொடுத்த தரமான அப்டேட்.. என்ன?
கருப்பு
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி வில்லனாகவும் பாலாஜிதான் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்திலிருந்து டீசர் ஒன்று வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தரமான அப்டேட்.
இந்நிலையில், கருப்பு படம் குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், " ’நான் ஒரு வேலை செய்யும்போது வெளியவே வரமாட்டேன், அதிகமாக பேச மாட்டேன். தற்போது நான் செய்துகொண்டிருந்த வேலை கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது.
கருப்பு படத்தின் எடிட் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்தது. நான் படத்தை பார்த்துவிட்டேன். எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது.
என் தயாரிப்பாளர்கள் புளூ சட்டை மாறனை விட அதிகமாக படத்தை கவனிப்பார்கள். அவர்களே படம் நன்றாக இருப்பதாக நிம்மதி அடைந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.