நடிகர் ஆர்.ஜே. பாலாஜியா இது, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆர்.ஜே. பாலாஜி.
இதனை தொடர்ந்து வடகரி, இது என்ன மாயம், நானும் ரவுடி தான் என தொடர்ந்து தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தார்.
நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், எல்.கே.ஜி எனும் படத்தின் மூலம் ஹீரோவாகவும் களமிறங்கினார்.
இதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தை நடித்து இயக்கியும் இருந்தார். இப்படமும் மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும் தற்போது ஹிந்தியில் சூப்பர்ஹிட்டான பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜியின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்காகி, நம்ம ஆர்.ஜே. பாலாஜியா இது என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..