சூர்யா சார் ஃபேன்ஸே அடிச்சாங்க.. கருப்பு பாடல் ட்ரோல் பற்றி பேசிய RJ பாலாஜி
RJ பாலாஜி அடுத்து சூர்யாவை வைத்து இயக்கி வரும் படம் கருப்பு. படம் ரிலீஸ் ஆவது தள்ளிப்போய் கொண்டே இருந்தாலும் மே 14ம் தேதி புது ரிலீஸ் தேதியாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
படத்தில் இருந்து RJ பாலாஜி விலகிவிட்டார் என்று கூட பல கிசுகிசுக்கள் வந்தது. ஆனால் அது எல்லாம் பொய் என முன்பு அவர் விளக்கம் கொடுத்துவிட்டார்.

ட்ரோல்
கருப்பு படத்தின் இரண்டாம் சிங்கிள் ஆக 'நாங்க நாலு பேரு' பாடல் வெளியிடப்பட்டது. அது பெரிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் அது பற்றி பேசி இருக்கும் RJ பாலாஜி, அந்த பாடல் படத்தில் இடம்பெறாது. அதை இரண்டாவது சிங்கிள் ஆக வெளியிடலாம் என டீமில் இருந்தவர்கள் சொன்னர்களிற், அதை கேட்டு ரிலீஸ் செய்த போது, அடி அடி என அடித்துவிட்டார்கள்.
சூர்யா சார் ஃபேன்ஸே அடிச்சாங்க, அதனால் நானும் சாய் அபயங்கரும் மனதளவில் பாதிக்கப்பட்டோம் என RJ பாலாஜி கூறியுள்ளார்.

வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan