தியேட்டருக்கு ஆள் அனுப்பி சாமி ஆட வைத்தோமா? கருப்பு பற்றி RJ பாலாஜி பதிலடி
கடந்த சில படங்கள் சரியான வரவேற்பை பெறாத நிலையில், சூர்யா கெரியரில் ஒரு ஹிட் தேவைப்பட்டது. அதை தற்போது RJ பாலாஜியின் கருப்பு படம் கொடுத்து இருக்கிறது.
முதல் வாரத்தில் Rs.200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது கருப்பு. இதில் தமிழ்நாடு வசூல் மட்டுமே 100 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

RJ பாலாஜி பதிலடி
கருப்பு படம் பார்த்து தியேட்டர்களில் சாமி ஆடுபவர்கள் தயாரிப்பாளர் அனுப்பிய ஆட்கள் தான் என சிலர் விமர்சிக்கிறர்கள். அதற்கு பதில் கொடுத்து இருக்கும் RJ பாலாஜி, 'எங்களால் அந்த அளவுக்கு பட்ஜெட் செலவு பண்ணி ஆள் அனுப்பி இருக்க முடியாது. அது படத்தோட பட்ஜெட்டை விட அதிகமாக இருந்திருக்கும்" என தெரிவித்துள்ளார்.
"கருப்புசாமி ஊர் எல்லைச்சாமி. ஜாதி மதம் எல்லாம் கிடையாது. ஊரை விட்டு போகும்போதும் வரும்போதும் எல்லோருக்கும் கும்பிட்டுவிட்டு போவார்கள். எல்லோரும் இதை அவர்கள் சாமியாக நினைத்து வந்து படத்தை பார்த்து கொண்டாடுவது சந்தோசமாக இருக்கிறது" எனவும் அவர் கூறியுள்ளார்.