அடி அடினு அடிக்கிறாங்க.. கருப்பு பற்றி பேசியது சர்ச்சையான நிலையில் RJ பாலாஜி விளக்கம்

By Parthiban A May 12, 2026 05:56 PM GMT
Report

RJவாக இருந்து காமெடியன் ஆகி, ஹீரோ, இயக்குனராக கலக்கி, மேலும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பல்வேறு திறமைகளை காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் ஆர்ஜே பாலாஜி.

தற்போது அவர் சூர்யாவை வைத்து கருப்பு என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதில் அவர் வில்லனாகவும் நடித்திருக்கிறார் என ட்ரெய்லர் பார்த்து ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையை படத்தில் போய் பாருங்க என அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ரிலீசான ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. வரும் மே 14ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்பதால் படத்தின் புரமோஷன் பணிகளை மிக தீவிரமாக செய்து வருகின்றனர். நேற்று ஐதராபாத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்த நிலையில் இன்று கேரளாவில் நடக்கிறது.

அடி அடினு அடிக்கிறாங்க.. கருப்பு பற்றி பேசியது சர்ச்சையான நிலையில் RJ பாலாஜி விளக்கம் | Rj Balaji Reply To Trolls After Karuppu Event

 அடி அடினு அடிக்கிறாங்க..

நேற்று ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்ஜே பாலாஜி பேசும்போது, "நான் சோஷியல் மீடியாவில் இருபவர்களுக்காக படம் எடுக்கவில்லை" என ஒரு வார்த்தை கூறினார்.

 அந்த விஷயம் பெரிய சர்ச்சையானது. சோஷியல் மீடியாவில் இல்லாமல் இருப்பது யார் என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த ட்ரோல்களுக்கு தற்போது ஆர்ஜே பாலாஜி விளக்கம் அளித்திருக்கிறார்.

"தியேட்டரில் படத்தை என்ஜாய் செய்பவர்களுக்காக தான் இந்த படம். அதில் dissect செய்து (தேடித்தேடி குறைகளை கண்டுபிடித்து) குறை சொல்பவர்களுக்கு அல்ல என நான் கூறினேன். ஆனால் அதையே dissect செய்து என்னை அடி அடினு அடிக்கிறாங்க" என ஆர்ஜே பாலாஜி பேசியிருக்கிறார்.

 "படத்துக்கு என்ஜாய் பண்ற மூடில் வாங்க, நோட்ஸ் எடுத்துட்டு வராதீங்க" எனஅவர் தெரிவித்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US