சூர்யாவின் கருப்பு படத்தை இயக்க ஆர்.ஜே.பாலாஜி வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா?
கருப்பு
இப்போதெல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள், இளம் கலைஞர்களின் படங்கள் எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சொன்ன தேதியில் வெளியாகிவிடுகிறது.
ஆனால் பெரிய நடிகர்களின் படங்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் உள்ளது. இந்த வருட பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகி இருக்க வேண்டும், ஆனால் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் இன்னும் வெளியாகவில்லை.

நேற்று மே 14, சூர்யாவின் கருப்பு திரைப்படம் வெளியாகி இருக்க வேண்டியது, இன்னும் சொல்லப்போனால் கடந்த வருடம் படம் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
ஒருவழியாக இன்று மே 15 படம் ரிலீஸ் ஆகிவிட்டது. படக்குழுவினர் ஆர்.ஜே.பாலாஜி, த்ரிஷா மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் முதல் காட்சி ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளனர்.

சம்பளம்
பெரிய எதிர்ப்பார்ப்போடு ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இப்படம் பெரிய தடைகள், பிரச்சனைகளை சந்தித்த பிறகு வெளியாகியுள்ளது. நேற்று மே 14 படம் வெளியாகவில்லை என்றதும் ஏமார்ந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார் பாலாஜி.

அதோடு அவர் மிகவும் வருத்தமாக அழுது வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது, ஆனால் படம் இன்று ரிலீஸ் எல்லோரும் செம ஹேப்பி.
இந்த படத்தை இயக்குவதற்காக ஆர்.ஜே.பாலாஜிக்கு ரூ. 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.