மணிமேகலை - பிரியங்கா இடையே நடந்தது என்ன.. போட்டு உடைத்த பிரபலம்

Report

பிரியங்கா - மணிமேகலை

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென வெளியேறியது மிகப்பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது. அதுவும் பிரியங்கா தான் இதற்கு காரணம் என தெரியவந்த பின் தொடர்ந்து அதுகுறித்து பல விஷயங்கள் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியின் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது என்று கூறி ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால், அது முற்றிலும் பொய்யான ஆடியோ. மணிமேகலை வெளியிட்ட வீடியோவை தொடர்ந்து இந்த பிரச்சனை குறித்து பிரபலங்களும் பேச துவங்கிவிட்டனர்.

மணிமேகலை - பிரியங்கா இடையே நடந்தது என்ன.. போட்டு உடைத்த பிரபலம் | Rj Sha About Manimegalai Priyanka Cwc Issue

அப்படி பிரபல நடிகர் ஆர்.ஜே. ஷா, மணிமேகலை - பிரியங்கா இடையே நடந்த விஷயம் குறித்து விஜய் டிவி தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரித்துள்ளார். அதன்பின் தனது youtube பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது youtube-ல் இல்லை, திடீரென நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் அவர் பேசிய விஷயங்கள் நெட்டிசன்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அனுஷ்கா தான் என் வாழ்க்கை.. எனக்கு புது iphone 16 கிப்ட் கொடுத்தார்: முன்னணி நட்சத்திரம்

அனுஷ்கா தான் என் வாழ்க்கை.. எனக்கு புது iphone 16 கிப்ட் கொடுத்தார்: முன்னணி நட்சத்திரம்

ஆர்.ஜே. ஷா

இதில் "தயாரிப்பு நிறுவனம் சொல்லியும் மணிமேகலை கேட்கவில்லை. பிரியங்கா கிட்ட பேசவும் மாட்டீங்க, ஆனா ஷோ பண்ண போறீங்க. என்று தயாரிப்பு நிறுவனம் கேட்டதற்கு ஆமா என மணிமேகலை கூறியுள்ளார். நான் பிச்சை எடுத்தாலும் எடுப்பேன் ஆனால், அவள் இடம் பேசமாட்டேன் என்று மணிமேகலை கூறியதாக, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தனர்.

இந்த சீசன் முடியும் வரை நீங்க விஜே வா இருக்கனும், எல்லோருடன் நல்ல பழகணும் என்பது தான் உங்களுடைய வேலை. ஆனால் அதை நீங்கள் பண்ணமாட்டேன் என கூறினால், வெளியே போங்க என தயாரிப்பு நிறுவனம் தான் மணிமேகலையை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியுள்ளது. மணிமேகலையை தானாக வெளியேற வில்லை என தன்னிடம் தயாரிப்பு நிறுவனம் கூறியதாக ஆர் ஜே ஷா தெரிவித்துள்ளார்.

மணிமேகலை - பிரியங்கா இடையே நடந்தது என்ன.. போட்டு உடைத்த பிரபலம் | Rj Sha About Manimegalai Priyanka Cwc Issue

வெளியே வந்த மணிமேகலை இதுகுறித்து வீடியோ போட்டதினால் விஜய் டிவிக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒரு மாற்று கருத்து இருக்கிறதாம். இது ஒரு குடும்பம், இந்த குடும்பத்திற்குள் நடப்பதை வெளியே பேசக்கூடாது. ஏற்கனவே ஒரு முறை சுனிதாவிற்கும், மணிமேகலைக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. ஆனால், அதனை தயாரிப்பு நிறுவனமும் சரி, விஜய் டிவியும் சரி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அப்படியே விட்டுவிட்டனர். அதை பற்றி சுனிதாவும் எதுவும் வெளியே வந்த சொல்லவில்லை, விஜய் டிவியும் அதை பற்றி கூறவில்லை.

ஆனால், மணிமேகலை இப்படி செய்தது விஜய் டிவிக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த பிறகு தான் மணிமேகலைக்கு Youtubeல் 2 மில்லியன் subscribers. போன முறை தனக்கு தொகுப்பாளர் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேறினார். பின் தொகுப்பாளர் இடம் கிடைத்து நிகழ்ச்சிக்குள் வந்தார். தற்போது தொகுப்பாளர் இடம் கிடைத்தும் தனக்கு செட் ஆகவில்லை என கூறி ஒரு அவசரத்தில், கோபத்தில் மணிமேகலை வெளியே சென்றுவிட்டார். அப்போது நாங்கள் professional-ஆக இருந்திருக்கிறோமா அல்லது மணிமேகலை professional-ஆக இருந்திருக்கிறாரா என தயாரிப்பு நிறுவனம் கேட்டுள்ளார்களாம்.

மணிமேகலை - பிரியங்கா இடையே நடந்தது என்ன.. போட்டு உடைத்த பிரபலம் | Rj Sha About Manimegalai Priyanka Cwc Issue

அடுத்த சீசன் பிரியங்கா இருக்க மாட்டாங்க, அதுக்குள்ள ஏன் மணிமேகலை இப்படியொரு முடிவு எடுத்தார் என தெரியவில்லை. அவங்கள அவங்க தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டார்" என தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரித்த போது இந்த தகவல்கள் கிடைத்ததாக ஆர்.ஜே. ஷா கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US