பிக் பாஸ் 8ல் ஜீ தமிழின் முன்னணி தொகுப்பாளர்? அவரே கொடுத்த விளக்கம்
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் கிட்டதட்ட 20 போட்டியாளர்கள் பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் ஒரே வீட்டில் தங்கவைக்கப்படுவார்கள்.
விஜய் டிவியின் தொடர்களின் நடிகர்கள், நடிகைகள், தொகுப்பாளர்கள், காமெடியன்கள் என பலரும் இதில் கலந்துகொள்வார்கள். அதே போல மற்ற சேனல்களின் பிரபலங்களும் பிக் பாஸ் வருவது உண்டு.
மிர்ச்சி விஜய்
தற்போது ஜீ தமிழில் தொகுப்பாளராக இருக்கும் மிர்ச்சி விஜய் பிக் பாஸ் 8க்கு போட்டியாளராக செல்கிறார் என ஒரு தகவல் சமீபத்தில் பரவியது.
அது பற்றி அவரே சினிஉலகத்திற்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். "நான் பிக் பாஸ் எல்லாம் போகவில்லை. ஜீ தமிழில் தான் தொடர்ந்து இருப்பேன்" என அவர் கூறி இருக்கிறார்.
இதன் மூலம் அவர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். முழு பேட்டி இதோ..