வருமானத்தை வாங்கிவிட்டு, அங்கு செலவு செய்கின்றனர் - அஜித் படத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
அஜித்திடம் வைக்கப்பட்ட கோரிக்கை
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் தற்போது அவரின் 61 படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்திற்கான பிரம்மாண்ட செட் ஹைதெராபாத்தில் அமைக்கப்பட்டு அங்கு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இதனிடையே தற்போது ஆர்.கே.செல்வமணி அஜித்திடம் நேரடி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது "5 வருடங்களாக எந்த பிரச்சினை வந்தாலும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். படத்திற்கு தேவையில்லாத காட்சிகளை வேறு மாநிலங்களில் படபடிப்பு நடத்தி வருவது தவறு. வருமானம் இங்கு வருகிறது, செலவு அங்கு பொய் செய்கின்றனர். இதனை இயக்குனர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
நடிகர் அஜித் குமாரிடம் நேரிடையாக கோரிக்கை வைக்கிறோம், தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தி வருவதால் இங்கு இருக்கும் பெப்சி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும்" என கூறியுள்ளார்.

எனக்கு கல்யாணமா? உண்மையை உடைத்த சாய் பல்லவி