யுவன் சர்ச்சை.. தென்மாவட்டம் படம் பற்றி RK சுரேஷ் எடுத்த முடிவு
நடிகர் ஆர்கே சூரேஷ் அடுத்து நடிக்கும் படத்திற்கு தென் மாவட்டம் என பெயரிடப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் நான் அந்த படத்திற்கு இசையமைக்கவில்லை, யாரும் என்னை அணுகவில்லை என யுவன் ட்விட்டரில் கூறி இருந்தார்.
அதன் பிறகு RK சுரேஷ் தான் ஏற்கனவே ஒரு படம் மற்றும் livein concertக்கு ஒப்பந்தம் போட்டிருப்பதாக பதிவிட்டார். இது சர்ச்சை ஆனது.
RK சுரேஷ் முடிவு
இந்நிலையில் தற்போது RK சுரேஷ் புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தென்மாவட்டம் படத்தின் புது இசையமைப்பாளர் விரைவில் அறிவிக்கப்படும் என கூறி இருக்கிறார்.
அனைவருக்கும் வணக்கம் #தென்மாவட்டம் திரைப்படத்தில் புதிய இசை அமைப்பாளர் விரைவில் அறிவிக்கப்படும் நன்றி. @thisisysr pic.twitter.com/lsHXmKxmbi
— RK SURESH (@studio9_suresh) March 6, 2024