எனது 46 வயதில் சைரன் வைத்த வண்டி, ரோபோ ஷங்கர் சொன்ன விஷயம்...
ரோபோ ஷங்கர்
தமிழ் சினிமாவை சமீபத்தில் ஒரு பிரபலத்தின் இறப்பு ரசிகர்களை மிகவும் வருத்தமடைய வைத்தது.
சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது எது என நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பின் அந்த தொலைக்காட்சியிலேயே பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வந்து கலக்கினார்.
அங்கிருந்து வெள்ளித்திரை பக்கம் வந்தவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நிறைய நடித்து வந்தார். பிஸியாக நடித்தவருக்கு சில வருடம் முன் மஞ்சள் காமாலை நோய் தாக்க ஆளே ஒல்லியாக காணப்பட்டார்.
நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்து மீண்டும் நடிக்க தொடங்கினார்.
நடிகர் பேட்டி
ஆனால் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலன் இன்றி கடந்த செப்டம்பர் 18ம் தேதி உயிரிழந்தார்.
அவரது இறப்பு செய்தி ரசிகர்கள் அனைவருக்குமே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரோபோ ஷங்கர் ஒரு பேட்டியில் கூறியுள்ள விஷயம் வைரலாகி வருகிறது.
அதில் அவர், என் ஜாதகப்படி 45 வயதில் நான் சைரன் வைத்த வண்டியில் போவேன் என்று எங்கள் ஐயா எழுதி வைத்தார். அவர் பார்த்த ஜாதகப்படி இதுவரை அப்படியே தான் நடந்து வருகிறது.
இப்போது 45 வயது ஆகிறது, அந்த சைரன் வைத்த வண்டியைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறார்.
அவர் சைரன் வண்டி என கூறியது என்னவோ, கடைசியில் இப்படி ஆகிவிட்டது.