ரோபோ ஷங்கர் உடல் தகனம்.. கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்
நடிகர் ரோபோ ஷங்கர் உடல்நல குறைவால் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகளை இன்று நடந்த நிலையில் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ரோபோ ஷங்கர் உடலை கவனித்துக்கொள்ளவில்லை, மனம் போன போக்கில் இருந்துவிட்டார் என அவரது குடிப்பழக்கம் பற்றி பல பிரபலங்கள் பேசி இருந்தனர்.
ரோபோ ஷங்கரின் மனைவி மற்றும் மகள் என மொத்த குடும்பமும் கண்ணீரில் இருக்கிறது. அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்களிடம் இந்திரஜா கண்ணீர் விட்டு கதறியது எல்லோர் மனதையும் உருக்கியது.
உடல் தகனம்
ரோபோ ஷங்கர் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சென்னை வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கண்ணீருடன் விடை கொடுத்தனர். ரோபோ ஷங்கர் இறுதி பயணத்தின் வீடியோ இங்கே.