நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?
ரோபோ ஷங்கர்
ரோபோ ஷங்கர் தமிழக மக்களுக்கு நன்கு பரீட்சயமான ஒரு பிரபலம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்த இவர் இப்போது சினிமாவில் காமெடியனாக கலக்கி வருகிறார்.
இவரது மகள் இந்திரஜா விஜய் டிவி நிகழ்ச்சியில் அறிமுகமாகி ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். ஆனால் அவரால் கடைசி வரை நிகழ்ச்சியில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இந்திரஜா திருமணம்
எப்போதும் இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் இந்திரஜா தனது மாமாவுடன் வெளியிடும் பதிவுகள் அதிகம்.
அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் உங்களது முறை மாமனை திருமணம் செய்யப்போகிறீர்களா என கேட்க அதற்கு அவர் ஆமாம் என பதில் கூறியுள்ளார். திருமணம் குறித்து விரைவில் தகவல் வரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
புது வீட்டிற்கு செல்வதற்குள் பிக்பாஸ் தாமரை வீட்டில் நேர்ந்த உயிரிழப்பு- சோகத்தில் குடும்பம்