மறைந்த பிரபல நடிகர் ரோபோ ஷங்கர்... இரங்கல் தெரிவித்த விஜய்
ரோபோ ஷங்கர்
நேற்று (செப்டம்பர் 18) தமிழ் சினிமா ரசிகர்கள் வருத்தம் அடையும் வகையில் ஒரு செய்தி வந்தது.
பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் இறப்பு செய்தி தான். பல தடைகளை, கஷ்டங்களை தாண்டி சின்னத்திரையில் தனது திறமைகளை காட்டி ஒரு இடத்தை பிடித்து அதன்மூலம் வெள்ளித்திரை வந்து வெற்றிக் கண்டவர்.
தொடர்ந்து படங்கள் நடித்துவந்த நேரத்தில் மஞ்சள் காமாலை நோய் தாக்க அதனால் உயிரிழந்துள்ளார்.
இந்த லிங்க்கை க்ளிக் செய்து நடிகர் ரோபோ ஷங்கரின் மறைவுக்கு உங்கள் இரங்கலை தெரிவியுங்கள்.
விஜய்
அவரின் இறப்பு செய்தி கேட்டதில் இருந்து பிரபலங்கள், ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.
மறைந்த நடிகர் ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவிக்க இங்கே க்ளிக் செய்யவும்
நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.