கிளி வளர்த்த ரோபோ ஷங்கருக்கு அபராதம்! இத்தனை லட்சமா?
ரோபோ ஷங்கர்
பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் அவரது வீட்டில் இரண்டு கிளிகளை வளர்த்து வந்த நிலையில் அதை சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினர் பறிமுதல் செய்து கிண்டியில் இருக்கும் சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர்.
அனுமதி இல்லாமல் அலெக்சாண்டரியன் ரக கிளிகளை வீட்டில் வளர்த்து வந்த ரோபோ ஷங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டது.
பெரிய அபராதம்
இந்நிலையில் ரோபோ ஷங்கருக்கு 2.5 லட்சம் ருபாய் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய தொகை என ரோபோ ஷங்கரின் மனைவி தெரிவித்து இருக்கிறார்.
"கிப்ட் ஆக வந்த கிளி என்பதால் தான் அனுமதி வாங்கவில்லை. இதை மறைக்க வேண்டும் என நினைக்கவில்லை" என அவர் கூறி இருக்கிறார்.
நீச்சல் உடையில் தனது கணவருடன் புகைப்படம் வெளியிட்ட டிடியின் அக்கா- வைரல் போட்டோ