மறைந்த நடிகர் ரோபோ ஷங்கர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி... அதிலும் இப்படியொரு சோகமா?
ரோபோ ஷங்கர்
தமிழ் சினிமா ரசிகர்களை இத்தனை நாட்களாக சிரிக்க வைத்து வந்த ரோபோ ஷங்கர் இப்போது நம்முடன் இல்லை.
கடந்த சில வருடங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் மிகவும் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். கடுமையான சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை தேறியவர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
இடையில் தனது மகள் இந்திரஜாவுக்கு திருமணம் செய்துவைக்க அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தையும் பிறந்தது.
கடைசி வீடியோ
மஞ்சள் காமாலை நோயில் இருந்து குணமாகி ஆக்டீவாக நடிக்க தொடங்கிய ரோபோ ஷங்கர் இப்போது நம்முடன் இல்லை.
அவரது இறப்பு செய்தி அறிந்தவுடன் பிரபலங்கள் அனைவரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். தனுஷ், விஜய் ஆண்டனி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ரோபோ ஷங்கர் கடைசியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டாப் குக்கூ டூப் குக்கூ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மிகவும் ஜாலியாக அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.
ஆனால் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகியிருக்கிறார், அப்போது கூட எல்லோரையும் சிரிக்க வைத்தே எலிமினேட் ஆகியுள்ளார். அவரது கடைசி நிகழ்ச்சி கூட எலிமினேஷனா என ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.