எனக்கு கண்ணீரே வந்துவிட்டது.. பார்த்திபன் மைக் எறிந்தது பற்றி முதன்முறையாக வாய்திறந்த ரோபோ ஷங்கர்
சில தினங்களுக்கு முன்பு இரவின் நிழல் படத்தின் விழாவில் நடிகர் பார்த்திபன் ரோபோ ஷங்கர் மீது மைக்கை தூக்கி எறிந்தது பெரிய சர்ச்சையாக வெடித்தது. தான் அப்படி அநாகரீகமாக நடந்து கொண்டதற்கு பார்த்திபன் மன்னிப்பு கேட்டார்.
அதற்கு பிறகு ரோபோ ஷங்கருக்கு முத்தம் கொடுத்து போட்டோவுக்கு எடுத்து வெளியிட்டு இருந்தார்.
ரோபோ ஷங்கர் விளக்கம்
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி ரோபோ ஷங்கர் விளக்கம் கொடுத்து இருக்கிறார். “நான் பேசவேண்டிய நேரத்தில் சரியாக ஆடியோ எஞ்சினியர் மைக்கை ஆப் செய்துவிட்டார், நானும் எவ்வளவோ போராடி பார்த்தேன். இந்த மைக்கிலாவது பேசுங்க என தூக்கி கொடுத்தது தான் அது. அதை நான் பிடிக்காமல் விட்டதால் நடந்தது அது."
"யாரையும் hurt செய்யாத ஒரு இயக்குனர் அவர். எல்லோரிடமும் அன்பாக இருக்க கூடியவர். என் குடும்ப ரீதியாக அவர் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது அவர் மீது."

"அவர் எனக்கு ஒரு வாய்ஸ் நோட் அனுப்பி இருந்தார். அதை கேட்கும்போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. அவ்வளவு சாரி கேட்டிருக்கிறார் என்னிடம். 1008 டென்ஷனில் சில தவறுகள் நடக்கத்தான் செய்யும். அதற்காக அவர் மேடையிலேயே மன்னிப்பு கேட்டுவிட்டார். "
"இரவின் நிழல் நடித்தது எனக்கு ஒரு வாழ்நாள் அனுபவம். 25 படங்கள் நடித்தது போல எனக்கு இருக்கிறது. அது எத்தனை ஆஸ்கார், தேசிய விருது வாங்கும் என பாருங்க" என கூறி இருக்கிறார்.