மறைந்த நடிகர் ரோபோ ஷங்கரின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
ரோபோ ஷங்கர்
மக்களை மகிழ வைத்த சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். விஜய் டிவியின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்த இவருக்கு தனுஷின் மாரி படம் மக்களிடையே வரவேற்பை பெற்று தந்தது.
தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களை நம்மை என்டர்டெயின் செய்து வந்தார். உடல்நல குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த ரோபோ ஷங்கர், சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் காலமானார். இவருடைய மறைவு என்பது பெரும் துயரத்தை அனைவருக்கும் தந்தது.
கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் ரோபோ ஷங்கரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ரோபோ ஷங்கரின் மறைவை தொடர்ந்து விஜய் டிவியில் அவருடைய நினைவுகளை பகிரும் வகையில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதன் ப்ரொமோ வீடியோ கூட வெளியாகியுள்ளது.
பிரியங்கா ரோபோ ஷங்கர்
ரோபோ ஷங்கரை போலவே அவருடைய மனைவி பிரியங்கா ரோபோ ஷங்கரும் திரையுலகில் பிரபலமான ஒருவர். கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக இவர் கலந்துகொண்டுள்ளார். மேலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் இவர் நடனமாடியது பெரும் சர்ச்சையானது. தனது பெரும் துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் நடனமாடியதை, சிலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்கள். அதற்கு ரசிகர்களும், பிரபலங்களும் பதிலடி கொடுத்தனர்.
ரோபோ ஷங்கர் மற்றும் பிரியங்கா ரோபோ ஷங்கர் இருவருக்கும் இந்திரஜா எனும் மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு அழகிய மகள் உள்ளார். இந்த நிலையில், ரோபோ ஷங்கர் - பிரியங்கா ரோபோ ஷங்கரின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்: