தனுஷ் செய்ததை என்னால் மறக்கவே முடியாது.. ரோபோ ஷங்கர் ஓபன் டாக்
ரோபோ ஷங்கர்
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர் ஆவார்.
ரோபோ தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தனுஷ் குறித்து சில நாட்களாகவே தொடர்ந்து பல சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், ரோபோ ஷங்கர் பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஓபன் டாக்
அதில், "என் சினிமா வாழ்க்கையில் நான் தனுஷுடன் நடித்த மாரி திரைப்படம் மிக முக்கியமான ஒன்று. அவரை பொறுத்தவரை மற்றவர்களை மேலே ஏற்றி அழகு பார்க்கும் ஒரு ஏணியாக இருக்கிறார்.
என்னிடம் ஒரு குழந்தை போல பழகும் தனுஷ் நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த மனிதராக இருக்கிறார். அதன் காரணமாக தான் அவர் இன்றும் முன்னணி நடிகராக சினிமாவில் வலம் வருகிறார்.
என்னுடைய வாழ்க்கையில் அவர் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறார். அதன் காரணமாக என்னால் அவரை மறக்கவே முடியாது" என்று கூறியுள்ளார்.