இதனால் தான் எனது மகள் திருமணம் இவ்வளவு செலவு ஆனது- ரோபோ ஷங்கர் கூறிய சீக்ரெட்
ரோபோ ஷங்கர்
விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்த பிரபலங்கள் நிறைய பேர் உள்ளார்கள்.
சிவகார்த்திகேயன், சந்தானம் தொடங்கி பலரை கூறிக்கொண்டே போகலாம்.
இப்படி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்து இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் ரோபோ ஷங்கர்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் காலையில 6 மணி ஆச்சு காமெடி இப்போதும் டாப்பில் உள்ளது. இவரது மகள் இந்திரஜா, விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து நல்ல பிரபலம் ஆகிவிட்டார்.
திருமணம்
அண்மையில் இந்திரஜாவிற்கு கார்த்திக் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி கோலாகலமாக திருமணம் நடந்தது.
மகள் திருமணம் குறித்து ரோபோ ஷங்கர் அண்மையில் ஒரு பேட்டியில், எனது திருமணம் ரொம்பவே எளிமையாக நடந்தது. எனது மனைவி வீட்டிலிருந்து சிலர் மட்டுமே வந்திருந்தார்கள், மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தது நான் மட்டும்தான்.
அந்த அளவுக்குதான் எனது திருமணம் வடபழனியில் நடந்தது. அதனால் மகள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தலாம் என எண்ணி இவ்வளவு செலவு செய்தேன் என்றார்.