5 மாதம் படுத்த படுக்கையாக, சாவின் விளிம்பில் இருந்தேன்: நடிகர் ரோபோ ஷங்கரை காப்பாற்றியது இவரா?
ரோபோ ஷங்கர்
காமெடியன் ரோபோ ஷங்கர் கடந்த மாதங்களாகவே உடல் மெலிந்து காணப்பட்டதால் அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அவரது உடல்நிலை பற்றி பல்வேறு வதந்திகளும் பரவி வந்தது.
இந்நிலையில் தற்போது தனக்கு மஞ்சள்காமாலை நோய் வந்தது தான் உடல் மெலிய காரணம் என சமீபத்திய பேட்டியில் அவர் கூறி இருந்தார்.
சாவின் விளிம்பில் இருந்தேன்
இந்நிலையில் மருத்துவ கல்லூரி ஒன்றில் Deaddiction பற்றி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தான் கடந்த 5 மாதமாக படுத்த படுக்கையாக சாவின் விளிம்பில் இருந்தேன் என கூறிய இருக்கிறார்.
தனக்கு இருந்த தவறான பழக்கத்தால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற அளவுக்கு அந்த பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தேன் என கூறியிருக்கிறார்.
அந்த நேரத்தில் நக்கீரன் கோபால் சார் தான் என்னை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சரியான சிகிச்சை பெற வைத்து என்னை சரி செய்தார் என ரோபோ ஷங்கர் கூறி இருக்கிறார்.
ரசிகர்களுக்கு விஜய் போட்ட திடீர் உத்தரவு! என்ன தெரியுமா

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
