ரோபோ ஷங்கருக்கு எல்லைமீறிய குடிப்பழக்கம்.. மகள் இந்திரஜா போட்டுடைத்த விஷயம்
ரோபோ ஷங்கர்
நடிகர் ரோபோ ஷங்கர் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைந்து படுஒல்லியாக மாறி இருக்கிறார். அவர் ஒல்லியானதற்கு அவரது உடலில் வந்த நோய் தான் காரணம் என தகவல் வந்து கொண்டிருந்தது.
அதை உறுதிப்படுத்திய ரோபோ ஷங்கர் தனக்கு மஞ்சக்காமாலை நோய் வந்தது தான் உடல் எடை குறைய காரணம் என தெரிவித்தார். எல்லோருக்கும் வரும் நோய் தான் எனக்கும் வந்தது, சாவின் விளிம்புக்கே சென்று திரும்பி வந்துவிட்டேன் என ரோபோ ஷங்கர் மேலும் கூறி இருந்தார்.
குடிப்பழக்கம்
இந்நிலையில் இந்திரஜா அளித்திருக்கும் பேட்டியில் அப்பா ரோபோ ஷங்கருக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்தது என கூறி இருக்கிறார். அதில் இருந்து தற்போது மீண்டு வந்துவிட்டார் என்றும் கூறி இருக்கிறார்.
தற்போது இந்திரஜாவுக்கு 21 வயதாகும் நிலையில் விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. ரோபோ ஷங்கர் மனைவியின் தம்பி உடன் தான் இந்திரஜாவுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தோழிகள் உடன் குத்தாட்டம் போட்ட அனிகா சுரேந்திரன்.. வைரல் வீடியோ