மனோஜ் - ரோகிணியை தொடர்ந்து ரவி - ஸ்ருதி பிரியப்போகிறார்களா.. சிறகடிக்க ஆசையில் இன்று நடந்து என்ன?
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துள்ளது.
ரோகிணி - மனோஜ் விவாகரத்து
மனோஜ் ரோகிணியிடமிருந்து இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியிருந்தார். ரோகிணி தனக்காக வாதாட யாரும் இல்லை, நானே வாதாடுகிறேன் என நீதிபதியிடம் கேட்க, அவரும் சட்டத்தில் அதற்கு இடம் உள்ளது சரி நீங்களே வாதாடுங்கள் என கூறிவிட்டார்.

இதன்பின், மனோஜிடம் தான் ஏற்கனவே திருமணமானவள், அதை சொல்லிதான் மனோஜை திருமணம் செய்தேன் என கூறியதாக பொய்யை நீதிமன்றத்தில் கூறுகிறார் ரோகிணி. இதனால் கேஸ் திசைமாறுகிறது. இன்று தன் மகனுக்கு விவாகரத்து கிடைத்துவிடும் என விஜயா எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை.
மீனாவுக்கு கிடைத்த ஆர்டர்
270 வீடுகளுக்கு தினமும் பூக்கொடுக்கும் ஆர்டரை மீனா எப்படி கைப்பற்ற போகிறார். அதுவும் சிந்தாமணியிடம் போட்டிபோட்டு எப்படி வெல்ல போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தற்போது போட்டியே இல்லாமல் அந்த ஆர்டர் மீனாவின் கைவசம் வந்துவிட்டது. சிந்தாமணி தனது மகளின் பேச்சை கேட்டு இந்த போட்டியிலிருந்து விலகிவிட்டார். இதனால் மீனாவுக்கு அந்த ஆர்டர் கிடைத்துள்ளது.

ரவி - ஸ்ருதி
ரவி - ஸ்ருதி இடையே அடிக்கடி சண்டை வர காரணமாக இருந்தவர் நீத்து. இந்த நிலையில், தற்போது ரவியை தான் காதலிப்பதாக வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும்படி கூறிவிட்டார். இதனால் கடுப்பான ஸ்ருதி, ரவியை விட்டு பிரிந்து செல்லப்போகிறாரா? இல்லை வேறு எதாவது முடிவெடுக்க போகிறாரா? அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் வாரம்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
