திருந்தாத ரோகிணி.. பொய் சத்தியம் செய்கிறாரா? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் பணக்கார வீட்டு பெண் என சொல்லி ஏமாற்றியது தற்போது மொத்த குடும்பத்திற்கும் தெரியவந்துவிட்டது. அவரை விஜயா கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிவிடுகிறார்.
இந்நிலையில் பாட்டி இந்த பிரச்சனையை தீர்க்க வருகிறார். அவர் ரோகிணியை மீண்டும் வீட்டுக்குள் வர வைக்கிறார்.
மீண்டும் பொய்?
அதன் பிறகு ரோகிணியை கற்பூரத்தின் மீது சத்தியம் செய்ய சொல்கிறார் அவர். மேலும் இன்னும் எதாவது நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இருக்கிறதா என மாமனாரும் கேட்கிறார்.
ரோகிணி வழக்கம் போல பொய் சத்தியம் செய்துவிட்டு, தான் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை வைத்திருக்கிறேன் என்ற உண்மையை மறைத்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருந்தாத ரோகிணி, பொய் சத்தியம் செய்வது தான் சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல ஆச்சே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அவர் என்ன செய்கிறார் என அடுத்த வார் எபிசோடுகளில் பார்க்கலாம். ப்ரோமோ இதோ.
