கர்ப்பமாக இருக்கும் ரோகிணி.. மாட்டிக்கொண்ட மனோஜ்! சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டாப் 5 சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை சீரியலில், தற்போது மனோஜ் - ரோகிணி விவாகரத்து கதைக்களம் பரபரப்பான சூழலுக்கு வந்துள்ளது.

தான் கொடுத்த ரூ. 5 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டால் உடனடியாக விவாகரத்து தந்துவிடுகிறேன் என ரோகிணி கூறியிருந்தார். இதனால் அந்த பணத்தை ஏற்பாடு செய்யும் முயற்சியில் மனோஜ் இறங்கினார்.
அதற்காக பணக்கார வீட்டு பெண்ணான ஸ்வேதாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டால் ரூ. 10 லட்சம் கிடைக்கும் என்பதற்காக அதையும் செய்தார். முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைக்காத நிலையில், மனோஜ் இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.

இதன்பின் ரூ. 10 லட்சம் தனது கைக்கு கிடைக்க, அதில் ரூ. 5 லட்சத்தை ரோகிணியிடம் கொடுத்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறார் மனோஜ்.
கர்ப்பமாக இருக்கும் ரோகிணி
இந்த நிலையில், வரும் வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும்போது திடீரென ரோகிணி மயங்கி விழுந்துவிடுகிறார். மருத்துவர் அவரை சோதித்து பார்த்துவிட்டு, ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என கூற, மொத்த குடும்பமும் அதிர்ச்சியடைகிறது. குறிப்பாக விஜயாவும், மனோஜும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.

பணத்தை திருப்பி தர இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனோஜ், தற்போது முதல் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்பதை கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார். இனி அடுத்து என்னென்ன திருப்பங்கள் நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri