ப்ரோமோ பார்த்து ஏமாறாதீங்க.. இது கனவா? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் எப்போதும் ஒரே ஒரு விஷயத்தை தான் நீண்ட காலமாக கேட்டு வந்தனர். ரோகிணி சிக்குவாரா இல்லையா என்பது தான் அந்த கேள்வி.
நீண்ட காலமாக காத்திருந்த அந்த நேரமும் தற்போது வந்துவிட்டது. ரோகிணி பற்றிய உண்மை மொத்த குடும்பத்திற்கும் தெரியவந்துவிட்டது.
அடுத்த வார ப்ரோமோ
தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி சித்தப்பாவாக நடித்த நபர் வீட்டுக்கு வந்து ரோகிணி பற்றிய உண்மையை கூறிவிடுகிறார்.
அதை கேட்டு அதிர்ச்சியாகி மாமியார் விஜயா உடனே அவரை அடித்து இழுத்து சென்று கழுத்தை பிடித்து வெளியில் தள்ளி கதவை மூடுகிறார்.
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள், 'இந்த சீன் இறுதியில் ரோகிணி கனவில் இருந்து அதிர்ச்சியாக எழுவது போல காட்டப்போகிறார் இயக்குனர்' என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது கனவா அல்லது நிஜமா என்பதை அடுத்த வார எபிசோடுகளில் பார்க்கலாம்.


2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri
