வீடியோவை பார்த்துவிட்ட ரோகிணி, அதன்பின் நடக்கும் அதிர்ச்சி! சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரொமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லி ரோகிணி தற்போது ரவுடி சிட்டியின் பேச்சை கேட்டு சில விஷயங்களை செய்ய தொடங்கி இருக்கிறார்.
மீனாவின் தம்பி தான் பணத்தை திருடியது என்பதற்கான வீடியோ ஆதாரம் முத்து போனில் இருக்கிறது, அதை எடுத்து வெளியிட வேண்டும் என சிட்டி சொன்னதை கேட்டு ரோகிணி எப்படியாவது முத்து போனை எடுக்க வேண்டும் என முயற்சிக்கிறார்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. முத்துவின் போனை அவரது அறைக்கு சென்று எடுக்க முயற்சிக்கிறார் ரோகிணி. அதை எடுத்து வீடியோவை பார்க்கும்போது போன் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிவிடுகிறது.
ரோகிணி கட்டிலுக்கு அடியில் இருக்க முத்து மற்றும் ரோகிணி அறைக்குள் வந்துவிடுகின்றனர். அவர்களிடம் ரோகிணி மாட்டிக்கொள்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
ப்ரொமோ இதோ.