ஹிந்தி நடிகர் சல்மான் கான் வீடு மீது ஒரு வருடத்திற்கு முன்பு துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பிறகு அவருக்கு தீவிர பாதுகாப்பை அரசு அளித்து வருகிறது. அவருக்கு Y+ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரபல ஹிந்தி இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது சமீபத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருப்பது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

யாரும் வர வேண்டாம்
மும்பை ஜூஹூ பகுதியில் இருக்கும் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை இரவில் மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர். யாருக்கும் காயம் ஏற்கப்படவில்லை. போலீசார் இது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு 5 பேரை கைது செய்து இருக்கின்றனர்.
போலீசார் தற்போது ரோஹித் ஷெட்டி வீட்டுக்கு தீவிர பாதுகாப்பு அளித்து வருகின்றனர். சினிமா துறையினர் மற்றும் நண்பர்கள் என யாரும் தனது வீட்டுக்கு வர வேண்டாம் என ரோஹித் ஷெட்டி கேட்டுக்கொண்டிருக்கிறார்.