மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் நடிக்கும் தொடர் முடிவுக்கு வருகிறது.. ரசிகர்கள் ஷாக்
மூன்று முடிச்சு
சன் டிவியில் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. இப்போது கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள், எதிர்நீச்சல் 2 போன்ற தொடர்கள் மிகவும் ஹிட்டாக ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
அண்மையில் தொடங்கப்பட்ட மூன்று முடிச்சு தொடரில் சூர்யா-நந்தினி ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது.
சமீபத்தில் நடந்த சன் விருதுகள் 2025ல் சிறந்த நாயகன், நாயகி விருதை இவர்கள் தான் வாங்கியிருந்தார்கள்.
நியாஸ் கான்
மூன்று முடிச்சு சீரியலில் நடித்துவரும் நியாஸ் சன் டிவியில் ஹிட்டாக ஓடிய ரோஜா தொடரின் 2ம் பாகத்தில் நாயகனாக நடித்து வந்தார். இதில் முதல் பாகத்தில் நடித்த பிரியங்கா நல்காரி தான் நாயகியாக நடித்து வந்தார்.
2025, ஜனவரி 6ம் தேதி சரிகமப யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா 2 விரைவில் முடிவை எட்டி உள்ளதாம்.
இப்போது தானே தொடங்கப்பட்ட இதற்குள் ஏன் முடிவுக்கு கொண்டு வருகிறீர்கள் என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.