அனைவரும் எதிர்பார்த்த ரோஜா 2 சீரியல்.. வெளிவந்த ப்ரொமோ வீடியோ இதோ
ரோஜா
சின்னத்திரையில் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று ரோஜா. சன் தொலைக்காட்சியில் 2018ல் இருந்து ஒளிபரப்பான இந்த சீரியல் கடந்த 2022ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று TRP-ல் பட்டையை கிளப்பிய இந்த சீரியல் முடிவு வந்த நிலையில், ரசிகர்கள் வருத்தமடைந்தனர். ரோஜா 2 எப்போது என்றும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தற்போது ரோஜா 2 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் டிவி வெளியிட்டுள்ளது. அர்ஜுன் ரோஜாவின் மகள் மலரின் கதை இது என இந்த ப்ரொமோவில் தெரிவித்துள்ளனர்.
ரோஜா 2 சீரியல்
ரோஜாவாக நடித்து நம் மனங்களை கவர்ந்த நடிகை பிரியங்கா நல்காரி தான், ரோஜா 2-விழும் கதாநாயகியாக நடிக்கிறார். ஹீரோவாக நடிகர் நியாஸ் கான் நடிக்கிறார்.
மேலும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமாகியுள்ள ஹரிப்பிரியா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட புகழ் ராஜ்குமாரும் ரோஜா 2 சீரியலில் நடிக்கிறார்.
இதோ ரோஜா 2 சீரியல் ப்ரொமோ வீடியோ..

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
