டைம்பாஸ்க்கு அரசியலுக்கு வராங்க, நீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன நடிகை ரோஜா
நடிகை ரோஜா ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அவர் அரசியலில் குதித்து ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
கடந்த முறை அமைச்சராக இருந்த ரோஜா தற்போது ஆட்சியில் இருக்கும் தெலுங்கு தேசம் பார்ட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக துணை முதலமைச்சராக இருக்கும் நடிகர் பவன் கல்யானை அவர் தாக்கி பேசி இருக்கிறார். "டைம் பாஸ்க்கு அரசியலுக்கு வராங்க. ஒரு நாள் ஷூட்டிங்கில் இருக்கிறார், இன்னொரு நாள் ஆன்மீக பயணம் என சென்றுவிடுகிறார்' என பவன் கல்யானை அவர் தாக்கி இருக்கிறார்.
விஜய்க்கு அட்வைஸ்
மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு அட்வைஸ் கூறி இருக்கிறார் ரோஜா. "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் வரும்போது நல்ல எண்ணத்தோடு வாங்க. ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி தொடங்கி அதன்பின் திடீரென அதை கொண்டு போய் காங்கிரசில் இணைத்துவிட்டார். அவரை நம்பி வந்தவங்க ரோட்டில் நிற்கிறாங்க."
"விஜய் சாருக்கு நான் சொல்வது.. எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டிஆர் மாதிரி.. நம் பின்னால் வரும் ஜனங்களுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் fight பண்ணவேண்டும். இடையில் எல்லாம் போக கூடாது. தொண்டர்களை ரோட்டில் விட்டுவிட்டு போக கூடாது" என ரோஜா கூறி இருக்கிறார்.