ரோஜா சீரியல் நாயகன் சிப்புவின் புதிய தொடர்- இந்த முறை எந்த டிவி தெரியுமா?
ரோஜா தொடர்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடருக்கு ஒரு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.
சிபு சூர்யன் மற்றும் பிரியங்கா நல்கார் இருவரும் முக்கிய நடிகர்களாக நடிக்க அனு மற்றும் தொகுப்பாளினி அக்ஷயா இருவரும் வில்லியாக நடித்து வந்தார்கள்.
4 ஆண்டுகளாக மிக ஹிட்டாக ஓடிய இந்த தொடர் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடி ஹிட் சீரியலாக அமைந்தது.
அண்மையில் இந்த தொடர் முடிவுக்கு வந்ததை நடிகர்கள் உறுதி செய்ய தொடர் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்தார்கள்.
சிபு சூர்யன் புதிய தொடர்
இந்த நிலையில் தான் ரோஜா தொடரின் நாயகன் சிபு சூர்யன் குறித்து ஒரு புதிய தகவல் வந்துள்ளது. அதாவது சிபு புதியதாக தொடரில் கமிட்டாகி இருப்பதாகவும், ஆனால் அவர் இந்த முறை ஜீ தமிழில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?