நடிகை ரோஜாவா இது..! இந்த வயதிலும் ஹீரோயின் போலவே இருக்கிறாரே
தென்னிந்திய திரையுலகில் ஒரு காலகட்டத்தில் டாப் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா.
ஆம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்தார்.
இவர் தன்னை தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் செய்த, இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திருக்கும் நடிகை ரோஜா, தனது கவனத்தை அரசியலில் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை ரோஜா அழகிய உடையில் போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை ரோஜா இது, இந்த வயதிலும் ஹீரோயின் போலவே இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.