சன் டிவி ரோஜா சீரியல் ஹீரோவின் புதிய சீரியல்.. கதாநாயகி யார் தெரியுமா
ரோஜா சீரியல்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் ரோஜா. இந்த சீரியல் சில கடந்த 2022ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யன் என்பவர் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக பிரியங்கா நல்கெரி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபு சூர்யன்
ரோஜா சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், ஹீரோ சிபு சூர்யன் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வந்தார். அதே போல் கதாநாயகி பிரியங்கா நல்கெரி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நள தமயந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதில் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா 2 முடிவுக்கு வர, சிபு சூர்யன் அடுத்ததாக இதுவரை எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை. இதனால் அவருடைய ரசிகர்களும் சற்று வருத்தத்தில் இருந்தனர்.
புதிய சீரியல்
இந்நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம் சிபு சூர்யன். இந்த சீரியலில் கதாநாயகியாக வைஷ்ணவி நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை வைஷ்ணவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் துணை நடிகையாக நடித்திருந்தார். இதன்பின் பேரன்பு சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது சிபு சூர்யன் உடன் இணைந்து ஜீ தமிழில் வரவிருக்கும் புதிய சீரியலில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த சீரியல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஜீ தமிழில் விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri