புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் ரோஜா தொடர் நாயகன் சிப்பு சூரியன்.. எந்த டிவி தொடர்?
சிப்பு சூரியன்
கன்னடத்தில் 2016ம் ஆண்டு ஒளிபரப்பான Milana என்ற தொடர் மூலம் நடிக்க தொடங்கியவர் நடிகர் சிப்பு சூரியன்.
அந்த தொடரை முடித்த கையோடு Radha Ramana என்ற தொடரிலும் நடித்தவர் 2018ம் ஆண்டு தமிழ் பக்கம் வந்தவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் நாயகனாக நடித்தார்.
தொடர் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கி கொடுத்தது என்றே கூறலாம். அதன்பின் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா 2 தொடர் நடித்தார், ஆனால் அது சரியான ரீச் பெறவில்லை.

புதிய தொடர்
தற்போது தெலுங்கில் Ninnu Kori என்ற தொடரில் நடித்துவரும் சிப்பு சூரியன் தமிழில் புதிய தொடர் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிக்க தான் கமிட்டாகி இருக்கிறார்.
இதுதவிர அவரது புதிய தொடர் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பாஜகவில் சேர்ந்தால் போயிடும் - யார் சொன்னது தெரியுமா? IBC Tamilnadu