ரோஜா சீரியல் நடிகையின் காதலர் இவர் தானா.. காதல் பதிவை வெளியிட்ட சப்ரைஸ் கொடுத்த நடிகை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் TRPயில் உச்சத்தில் இருக்கும் சீரியல் ரோஜா.
இதில் முன்னணி கதாபாத்திரங்களாக ரோஜா, அர்ஜுன் என இரு கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை.
இவர்களை போலவே ரோஜா சீரியல் மூலம் வில்லியாக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை ஷாமிலி சுகுமார்.
ஆம் ரோஜா சீரியலில் இவர் நடித்து வரும் அணு எனும் கதாபாத்திரம் நிஜ வில்லி போலவே இருக்கிறது.
இந்நிலையில் நடிகை ஷாமிலி சுகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது காதலரை அறிமுகம்படுத்தி வைத்துள்ளார்.
ஆம் தனது காதலர், தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை இணைத்து, " இவர் தான் எல்லாம் " என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.