சன் டிவி நடிகை வீட்டில் விசேஷம்! ரோஜா சீரியல் நடிகைக்கு குவியும் வாழ்த்து
ரோஜா சீரியல் வில்லி
சன் டிவியில் தொகுப்பாளராக மிகவும் பிரபலமானவர் விஜே அக்ஷயா. அவர் அதற்கு பிறகு ரோஜா சீரியலில் வில்லியாக நடிக்க தொடங்கினார்.
முதலில் வில்லி அனு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷாமிலி சுகுமார் கர்ப்பமாக இருந்ததால் விலகினார். அவருக்கு பதில் தான் VJ அக்ஷயா ரோஜா சீரியலுக்குள் வந்தார்.
டிஆர்பியில் முன்னணியில் இருந்து வரும் ரோஜா சீரியல் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பதற்கு ஹீரோ ஹீரோயின் மட்டுமின்றி வில்லி கதாபாத்திரமும் முக்கிய காரணம்.
VJ அக்ஷயா சொன்ன ஹாப்பி நியூஸ்
தற்போது அக்ஷயாவுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் முடிந்திருக்கிறது. இந்நிலையில் அக்ஷயா தான் கர்ப்பமாக இருப்பதாக போட்டோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறார்.
விரைவில் எங்கள் குடும்பம் மூன்று பேராக இருக்கப்போகிறது என அக்ஷயா மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார். ரசிகர்கள் தற்போது அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.