ரோஜா சீரியல் புகழ் நடிகை ஷாமிலிக்கு குழந்தை பிறந்தது- அவரே வெளியிட்ட குழந்தையின் புகைப்படம்
சன் தொலைக்காட்சியில் பல மாதங்களாக TRPயில் முன்னணியில் இருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியல் மக்களிடம் பெரிய வரவேற்பை பெறவே கதையில் நிறைய கவனம் செலுத்தி வருகிறார்கள்.
ஒரு கதையாசிரியர் சீரியல் கதையை கொஞ்சம் டல் அடிக்க வைக்கிறார் என்றால் உடனே அவரை மாற்றி புதிய நபரை தேர்வு செய்கிறார்கள். அப்படி ரோஜா சீரியலுக்கு சில கதையாசிரியர்கள் மாறிவிட்டார்கள்.
இந்த சீரியலில் வெயிட்டான ஒரு ரோலில் நடித்து வந்தவர் நடிகை ஷாமிலி, திடீரென சீரியலில் இருந்து விலகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தார். ஆனால் அதற்கான காரணம் அவர் கர்ப்பமாக இருந்தது தான்.
இதனால் ரசிகர்கள் இந்த காலகட்டத்தில் வீட்டில் இருப்பது சிறந்த முடிவு என அவரை வாழ்த்தி வந்தார்கள்.
தற்போது ஷாமிலிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம், தனது குழந்தையின் புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் சந்தோஷ செய்தியை கூறியுள்ளார்.