மாபெரும் சாதனை படைத்த ரோஜா சீரியல்.. கொண்டாடும் ரசிகர்கள்
சன் டிவியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சின்னத்திரையிலும் TRP-யில் முதன்மையில் இருக்கும் சீரியல் ரோஜா.
ஓரிரு வாரங்கள் TRPயில் பின்னடைவில் இருந்தாலும், பல வாரங்களாக, பார்க் இந்திய நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலில் நம்பர் 1 இடத்தில் ரோஜா சீரியல் இடம்பிடித்துள்ளது.
இந்த ரோஜா சீரியலில் சிப்பு சூர்யன் என்பவர் கதாநாயகனாக நடிக்க, பிரியங்கா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா சீரியல் சின்னத்திரையில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
அதாவது, இதுவரை சுமார் 900 எபிசோட்களை கடந்து, ரோஜா சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்துள்ளது.
இதனை, ரோஜா சீரியல் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில், ரோஜா சீரியல் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.