சன் டிவி ரோஜா சீரியல் செய்த சாதனை: கொண்டாடும் ரசிகர்கள்
சன் டிவியின் சீரியல்கள் தான் தமிழில் டிஆர்பியில் முதலிடம் பிடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக டாப் 5 லிஸ்டில் குறைந்தது மூன்று அல்லது நான்கு சன் டிவி சீரியல்கள் இருக்கும், ஓரிரு இடங்கள் தான் விஜய் டிவிக்கு கிடைக்கும். ஜீ தமிழ் தொடர்கள் டாப் 5ல் வருவதே இல்லை என்பது கூடுதல் தகவல்.
சன் டிவியின் ரோஜா சீரியல் தற்போது இந்திய அளவில் டாப் 10 டிஆர்பி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது பெரிய சாதனை என அந்த தொடரின் ரசிகர்கள் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.
ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அது தற்போது டிஆர்பியில் உச்சம் தொட்டு இருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ரோஜா தொடரில் அர்ஜூனாக நடித்து வரும் சிபு சூர்யன் மற்றும் ரோஜாவாக நடித்துவரும் பிரியங்கா நல்காரி ஆகியோருக்கு இணையத்திலும் பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.