வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் ரோஜா சீரியல் ஹீரோயின்! இதற்காகத்தானா? வீடியோ வைரல்
சன் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்று ரோஜா. அதில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. அவர் தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ்நாட்டில் சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகைகளில் அவரும் ஒருவராக இருக்கிறார்.
தற்போது பிரியங்கா நல்காரி இன்ஸ்டாகிராமில் அவரது ஒர்கவுட் வீடியோக்களை அதிகம் போட்டு வருகிறார். அதற்கு காரணம் என்ன? திடீரென இப்படி ஒர்கவுட்டில் இறங்க என்ன காரணம் என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர்.
பிரியங்கா நல்காரியின் ஒர்கவுட் வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவருக்கு தற்போது பல சினிமா பட வாய்ப்புகள் வருகிறதாம். அதனால் தான் அவர் இப்படி ஒர்கவுட் செய்து உடல் எடையை குறைக்க முயற்சித்து இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.