TRP-யை வெளுத்து வாங்கும் ரோஜா சீரியல் செய்த மாபெரும் சாதனை.. என்ன தெரியுமா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று ரோஜா.
சிப்பு சூர்யன் ஹீரோவாக நடித்து வரும் ரோஜா சீரியலில், ஹீரோயினாக பிரியங்கா என்பவர் நடித்து வருகிறார்.
இவ்விருவரும் ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சேர்ந்துள்ளனர்.
சன் டிவியின் TRP தொடர்ந்து முன்னிலையில் இருக்க, ஒரு முக்கிய காரணம் என்றால், அது ரோஜா சீரியல் தான்.
ஆனால், தொடர்ந்து பல வாரங்களாக TRP-யில் முன்னிலையில் இருக்கும் ரோஜா சீரியல், அவ்வப்போது சறுக்கலை சந்திக்கிறது.
இந்நிலையில் TRP-யை வெளுத்து வாங்கி வரும் ரோஜா சீரியல், தற்போது ஆயிரம் எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
சின்னத்திரையில் மக்களின் ஆதரவை பெற்றுள்ள ரோஜா சீரியல் ஆயிரம் அபிசோட்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.