பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து கதாநாயகி ரோஷினி விலக இதுதான் காரணமா.. அப்போ அது பொய்யா..?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா.
மக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவினால், இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் தேடி வந்துள்ளது.
உதாரணமாக இந்த சீரியலில் அகிலாக நடித்த அகிலன் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.
அதை தொடர்ந்து வில்லி வெண்பா வாக நடிக்கும் பரினா, பிரசவத்திற்காக இந்த சீரியலை விட்டு விலகவுள்ளார்.
இந்நிலையில் கதாநாயகி கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிப்ரியன் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி இந்த சீரியலை விட்டு விலக படவாய்ப்புகள் காரணம் என்று கூறப்பட்டது.
ஆனால், கதைக்களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே அவர் விலக முக்கிய காரணம் என்று தற்போது செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது.

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
